Tuesday, January 25, 2011

கருவறை தியானம்

ஆண்டவனே இன்னும்
40 வாரங்களில் வீலென்ற சத்தத்தோடு
விழிக்க போகிறேன்
பூமியில் பாதம் பட்ட உடன்
பல்லாயிரம் ஆசைகளுடன்
சுகமான பிரசவம் வேண்டும்
பிறந்த உடன் தூக்கம் வேண்டும்
விழித்த பின் சிரிப்பு வேண்டும்
சுற்றும் நட்பும் சூழ வேண்டும்
பட்டு துணிகள் படர வேண்டும்
குட்டி பொம்மைகள் நிறைய வேண்டும்
தூக்கி கொஞ்ச ஆட்கள் வேண்டும்
பள்ளியில் சுளுவாய் சேர வேண்டும்
சேர்ந்த பின்பு முதல் ரேங்க் வேண்டும்
பருவ வயதில் காதல் வேண்டும்
காதலியோடு சுற்ற வேண்டும்
சுற்றும் காதலியை மணக்க வேண்டும்
ஆசை பிள்ளைகள் அமைய வேண்டும்
மாடி வீடு கட்ட வேண்டும்
ஊரார் போற்ற வழ வேண்டும்
சொகுசாய் போக ஊர்தி வேண்டும்
உலகை வாங்க பணமும் வேண்டும்
நோயில்ல முதிர்ச்சி வேண்டும்
சிரித்து கொண்டே சாக வேண்டும்
இத்தனை வேண்டுமென்று உன்னை
வேருபேற்றி சராசரி ஜீவனாக
விருப்பமில்ல.
சில போதுங்கள் மட்டும் போதுமே
அன்பான தாய் தந்தை போதும்
உடையாத உறவுகள் போதும்
நம்பிக்கையான நட்பு போதும்
படுத்த உடன் தூக்கம் போதும்
பசிக்கு கொஞ்சம் சோறு போதும்
யாரையும் புண்படுத்தாத மனது போதும்
போதும் போதும் போதுமே
இவை மட்டும் போதுமே!!!
allvoices

Sunday, January 16, 2011

புயலுக்குள் தென்றல்

குறிப்பு: இக்கதையில் வரும் கதப்பதிரங்களும், நிகழ்வுகளும், சம்பவங்களும், பெயர்களும் அனைத்தும் கற்பனையே.
****************************************
"எலே, நாங்க எல்லாம் பாசத்துக்கு கட்டுப்பட்டு இருக்கோம்லே. நாங்களும் ரத்தம் பார்த்தவர அருவ விசுனவங்க தான்" என்ற ஆக்ரோசமாக பாண்டியின் குரல் கேட்கிறது.

பாண்டி, மாநகரையே பயம்போருத்தும் "சாமி".சிவாவின் வலது கை.

"எலே சின்னதோ பெருசோ, பாண்டிபைய இருந்த மனசுல பயம் இருக்கதுலே. வேலைய கச்சிதம முடிக்க அவன் போதும்லே" என்று சிவா சொல்லும் அளவுக்கு நம்பகமான ஆள். சிவாவின் அணைத்து செய்கையிலும் உடனிருந்தவன், அது அடிதடிய இருந்தாலும் சரி அருவ எடுத்து ஆளைவிசுரத இருந்தாலும் சரி.

ஓங்கிவிசும் புயல் மேதுவனால் தென்றல், கொளுந்துவிட்ட தீ மேதுவனால் விளக்கு, இயற்கைக்கே இப்படி இருமுகம் இருக்கும் பொழுது மனிதனுக்கு இருக்காதா என்ன?

கயல்விழி, கத்தியும் ரத்தமும் நிறைந்த பாண்டியின் வாழ்கையில் பூவா வந்தவள். அவளது பெயருக்கு வலுவுடுவது போல் அழகிய கண்களும் சிரித்த முகமும் அவளுக்கு.

அவசர வாழ்கையில் இன்றோ நாளையோ என்று கவலைபடாமல் சிவாவின் ஆனைத்து வேளையிலும் பயமின்றி செய்கைய முடித்த பாண்டிக்கு அவப்போழுது உறுத்துவது கயல்விழியின் காதல் தான். "கொலைகார பையபுல நான் உன்னோடு எவ்வளோ நாள் இருப்பேன்னு தெரியாது. இருக்கிற வர என்னால உன்னை சந்தோசமா வச்சுக முடியும்னு தெரியல"

நாட்களும் முட்களாய் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

"நான் சிவாவோட ஆரம்பிச்ச வாழ்கைய சிவா கூடவே இருந்து முடிகிறதா இல்ல சிவா கிட்ட சொல்லிடு போய் கயல கட்டிக்கிட்டு ஏதச்சும் பொலப்பு கிழப்ப பார்த்து வாழ்கையை ஓடுறதா?" என்று பாண்டியின் மனதில் ஆயிரம் குழப்பங்கள்.

மனதில் குழப்பங்களோடு இருக்கும் பாண்டியின் வாழ்கையில் இருவேறு திசையில் இடியாய் வந்து விழுகிறது.

"முதலில், 'பாண்டி, நீ சீக்கரம் சிவாவ விட்டு வந்திடுவனு நினச்சேன். உன்னால அது முடியல எனக்கு என்னோட அத்தை பையன பார்த்து இருக்கங்க. அவன் கோவேர்ந்மேன்ட் வேலைல இருக்கான், முடிஞ்ச வர என்ன நல்ல பர்த்துபனு தோணுது. எனக்கு உன்னோட இருந்த பாதி வாழ்க்கை பயத்துலே போய்டும்னு தோணுது. நான் அவனையே கல்யாணம் பண்ணிகிறேன் பாண்டி, நீ என்னை மறந்திடு" என்று இட்டி எறிந்துவிட்டால் கயல்.

நெஞ்சில்பட்ட காயம் ஆறுவதற்குள் நாளடுகளில் வந்து விழுகிறது செய்தி "என்கவுண்டரில் சுடப்பட்டார் சாமி.சிவா, மாநகரையே உலுக்கியே ரவுடி மரணம்"

எதோ வந்தவளையும் இழந்து தொழில் சொல்லி கொடுத்தவரையும் இழந்து பொழப்பு நடத்தி கொண்டு இருந்தான் பாண்டி.

"ஏல பாண்டி, நான் அத்தா சொல்லுதேன் கேளு. நீ ரவுடி பையபுல தொழில எல்லாம் விட்டு பொழப்பு ஓட்டிட்டு இருக்க. உனக்கு நம்ம சொந்தகார ரவியோட பொண்ண லக்ஷ்மிய தரேன்னு சொல்லுதாங்க. பொண்ணு ரொம்ப நல்லவா, நான் வேன்ன பேசி முடிக்க வா. நீயும் எவளோ நாள் தான் ஒத்த ஆள இருப்ப? யோசிச்சு முடிவு எடு ல" என்ற சொன்னால்.

பாண்டியும் தனிமையில் இருப்பதாய் வெறுத்து புது வாழ்க்கை தொடங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறான்.

கல்யாணம் முடிந்து புது வாழ்க்கை தொடங்கும் லக்ஷ்மி பாண்டியிடம் சொல்ல்கிறாள் "எங்க இனிமேல் நீங்க எப்போவுமே ரவுடி பய தொழில்க்கு போகாதிங்க. இருக்கிறதா வச்சு நல்ல இருப்போம்ங்க, சரியா. வாழ்க்கை முழுசுக்கும் உங்க கூட தான் இருக்கப்போறேன். இருக்கிற நாளா சந்தோசமா யாருக்கும் கஷ்டம் இல்லாம இருந்திட்டு போயடலம்ங்க"

லக்ஷ்மி பேச பேச பாண்டிக்கு தானோட வாழ்க்கை துணை சரியாக அமைந்த சந்தோசத்தில் மிதக்கிறேன்., வந்தவளை வாழவைக்க வேண்டும் என்று.

மீண்டும் அதே வரிகளில்
"எலே, நாங்க எல்லாம் பாசத்துக்கு கட்டுப்பட்டு இருக்கோம்லே. நாங்களும் ரத்தம் பார்த்தவர அருவ விசுனவங்க தான். வந்தவ நல்ல இருக்கணும்னு அமைதியா இருக்கோம், எங்கள எப்படி இருக்க விடுங்க லே"
allvoices

Sunday, September 19, 2010

வாழ்க்கை துணை

குறிப்பு: எனக்கு வந்த மின்னஞ்சலின் தமிழாக்கம் தான் இது.

இயற்கையின் அழகோடு மெதுவாக நடந்து செல்கிறார்கள் நித்யாவும் அவள் கணவன் சஞ்சயும். திருமணம் முடிந்து மூன்று நாட்கள் தான். தேன்நிலவுக்கு மூணார் வந்துள்ளார்கள்.
நித்யாவின் கைகளில் வைத்த மருதாணி இன்னும் அதே சிவப்போடும் நறுமனத்தொடும் இருந்து மூன்று நாட்கள் முன் இருந்த நடந்த திருமண அரவரத்தை ஞாபகப்படுத்துகிறது.
திருமணத்துக்கு முன்தினம் நித்யா, அவளது தாயிடம் "அம்மா, இப்படி எல்லாம் நடக்காது, இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு வேண்டாம் என்னை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விடு" என்று கத்தி கொண்டு இருக்கிறாள் அவளது தாய் சிகை அலங்காரம் செய்யும்போது. அவள், தனது புகுந்த வீடை எப்படி இருக்குமோ? மாமியார் மாமனார் எப்படி இருப்பர்களோ? தான் கணவன் தன்னை சந்தோசமாக வைத்துகொள்வரா? என்று நினைத்து, அழுது அழுது முகம் எல்லாம் விங்கி போய்விட்டது.
திருமண நாள், இப்பொது நித்யாவுக்கும் சஞ்சய்க்கும் திருமணம் முடிந்துவிட்டது.

சஞ்சயும், நித்யாவும் இதற்கு முன் மூன்று முறை தான் பேசி உள்ளார்கள்.
சஞ்சயின் பெயரும் வேலையும் தவிர நித்யவிருக்கு எதுவும் தெரியாது.

தேன்நிலவுக்காக வந்த நித்யாவின் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் "எப்படி யார் என்று தெரியாது ஒருவனுடன் பலாயிரம் மைல்கள் தாண்டி என் பெற்றோர் அனுப்பினர்? பள்ளி செல்லும்போதோ அல்லது கல்லூரி செல்லும்போதோ, அப்பவோ அண்ணனோ வந்து தான் அவளை விட்டு சென்று இருக்கிறார்கள்.

சஞ்சய் காற்றில் கலர் கலராக வரும் பலூன்களை பார்த்து "ஹே நித்யா அங்க பாரு குட்டீஸ் எல்லாம் சந்தோசமா பலூன் விடுறாங்க", நித்யாவிற்கு என்ன சொல்லவேண்டும் என்று புரியவில்லை தானும் பரவசப்பட வேண்டுமா? கூடாத? அவள் பரவசபடுவதற்கு அவளின் நண்பர்களோ பெற்றோரோ அவள் அருகில் இல்லை. சஞ்சய் அங்கே கலர் கலர் பலூன்களை சந்தோசப்படும் பொது இவள் மீண்டும் தன்னை தானே கேள்விகள் கேட்கிறாள். "இவன் திருமணம் ஆகிவிட்டது என்றதை மறந்துவிட்டன? இவன் வாழ்கையில் நான் புதிதாக வந்துள்ளேன் இன்ப துன்பங்களை பகிர்வதற்காக, இதையாவது அவனுக்கு புரிகிறதா?" என்று கேட்டவரே திருமண நாளை நினைத்து பார்க்கிறாள்.

அன்று தான் அவள் வாழ்கையில் முதன் முதலாக, "நான் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கணுமோ? காதலிச்சு இருந்த என்ன பத்தி அவனும், அவன் பத்தி நானும் நிறைய தெரிஞ்சு வச்சு இருப்போம், அப்படி செஞ்சு இருக்கலாமோ? நித்யாவிற்கு தான் பழகிய எந்த நண்பனிடம் காதலிப்பதாக தோன்றவில்லை. அப்படி தோன்றி இருந்தால் கண்டிப்பாக அவள் பெற்றோர் திருமண செய்து வைத்து இருப்பார்கள். ஆனால், திருமண நாள் அன்று இதை பற்றி எல்லாம் சிந்திப்பதற்கு நேரம் இல்லை. இதனால், அவளுக்கு மாப்பிள்ளை தேடும் பொறுப்பு முழுதும் அவள் பெற்றோரிடம். முதலில், மாப்பிள்ளை நல்ல வேலைல இருக்கனும், நல்ல படிச்சி இருக்கனும், நல்லவற இருக்கனும், ஜாதகம் பொருந்தனும், ஒரு சாதில இருக்கனும், நல்ல குடும்பமா இருக்கனும்.... இப்படி நிறைய எதிர்பார்ப்புகள். நாட்கள் போக போக ஒவொன்ற குறைந்து சஞ்சயின் பெயர் நண்பரின் மூலம் கிடைத்தது.

நித்யாவிடம் அப்பா வந்து சொல்லும் பொது அவள், "இந்த பையனும் எல்லாரு மாதிரி தான் அப்பா. சாப்ட்வேர்ல வேலை பார்க்கிறான். இந்த மாதிரி நிறைய பசங்களோட பேசியாச்சு. நீங்களே பார்த்துகோங்க அப்பா" என்று சொன்னால். அவளின் அப்பா எப்படி அவளை சம்மதம் செய்து சஞ்சயிடம் பேச அனுப்பினர்.
இருவரும் மூன்று மணிநேரம் பேசினார்கள். வீடுக்கு போனவளிடம். "அந்த பையன் நல்ல பேசினான? உனக்கு எதாச்சும் வங்கி கொடுத்தன? உன்னை பிடிச்சு இருக்குனு சொன்னன? என்று கேள்விகள். எல்லாவற்றுக்கும் "ஆமாம்" என்று சொல்லி முடித்தாள் நித்யா.
உறவினர்கள் அனைவரும் கூடி திருமணத்தை முடிவு செய்து விட்டார்கள். திருமண வேலைகள் வேகமா ஆரம்பித்து வேக வேகமாய் சந்தனமும் சாவதும் பன்னீரும் மல்லிகையும் வசனயொடு மக்கள் வெள்ளத்தில் முடிந்துவிட்டது. இப்பொழுது அவள் தான் கணவனோடு தேன்நிலவில்.

தனிமையில் தயங்கி நின்ற நித்யாவை, சஞ்சய் கைப்பிடித்து பனி பட்ட மர மேசையில் உட்கார வைத்தான். "என்ன நித்யா என்ன நின்னசிடு இருக்க?", அவள் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. தான் பதில் சொல்ல வேண்டுமா கூடாத என்று கூட தெரியாமல் இருந்தால்.
"உனக்கு தெரியுமா நித்யா எனக்கு கூட இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல" என்று சஞ்சய் சொன்ன உடன், நித்யாவின் மனதில் பதட்டத்துடன் ஆயிரம் கேள்விகள் "நான் சரியாக தான் கேட்டேனா? அவன் சொல்லவதை தவறாக புரிந்து கொண்டேனா? அவனை யாராவது கட்டயப்படுதினர்களா? அவனுக்கு என்னை பிடிக்கவில்லையா?" சஞ்சய் அவளின் முகத்தில் தெரிந்த அத்தனை கேள்விகளையும் பார்த்து மெதுவாக பேச ஆரம்பித்தான்.
"ஆம், நான் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணனும் நினச்சு இருந்தேன். நான் அவளையும் அவ என்னையும் நல்ல புரிஞ்சுகிட்டு தான் கல்யாணம் பண்ணனும் இருந்தேன். அதை தவிர எது நடந்தாலும் நாடகமா தான் இருக்கும்னு நினச்சேன். ஆன எனக்கு வேலைல டென்ஷன், அது போன ஸ்பீட்ல லவ் பண்ண டைம் இல்லாம போய்டிச்சு. கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் முன்னாடி உங்க அப்பா பேசும் பொது உனக்கு கல்யாணத்துல இருந்த பயத்தை பத்தி சொன்னாரு. அதை பயம் தான் எனக்கும் இருந்தது. அப்போ தான் உன்னை நான் கல்யாணம் பண்ணிகிடனும் முடிவு பண்ணேன். கல்யாணம் சீக்கிரம் நடந்ததல உன்கிட்ட எனக்கு பேசவோ பழகவோ டைம் இல்லாம போய்டிச்சு. ஆன இப்போ என் வழக்கை முன்னாடி நீ இருக்க "என்னோட சிரிப்பு, அழுகை, சந்தோஷம், தூக்கம், காதல் எல்லாத்தையும் அனுப்பவிக்கிறதுக்கு. நான் எப்படி பட்ட பெண்ணை காதலிக்கணும்னு நினச்சனோ அப்படியே நீ இருக்க. நான் உன்னை லவ் பண்ணுறேன், நீ பண்ணுவிய?"

சஞ்சய் பேசி முடிக்க நித்யாவின் கண்களில் அருவிய கண்ணீர் கொட்டியது. தனது பெற்றோர் தங்களால் முடிந்ததை விட அருமையான கணவனை அவளுக்கு தந்துள்ளார்கள். கடவுளுக்கும், பெற்றோருக்கும் நன்றி சொல்லிகிறாள். தான் காதலித்து இருந்தால் கூட இப்படி கணவன் கிடைத்து இருக்கமட்டான் என்று.

சஞ்சயின் கேள்விக்கு நித்யா இன்னும் பதில் சொல்லவில்லை, இருவருக்கும் அதன் அர்த்தம் புரியும்.

சந்தோசமாக ஊர் திரும்புகிறார்கள். காதலிக்கும் கணவன் மனைவியாக!!!
allvoices

Sunday, August 22, 2010

நானும் மகள் தான்

--இது முதல் வரைவு தான்; மாறுதலுக்கு உட்பட்டது--

ஒரு வெள்ளிகிழமை காலைபொழுது வீடே அமர்களமாய் இருந்தது அபர்ணாவை பெண் பார்க்க வருகிறார்கள் நவீனும் பெற்றோர்களும். நவீன், தமிழ் கலாச்சாரத்துடன் வளர்ந்து அமெரிக்காவில் நல்ல வேளையில் இருக்கும் இளைஞன். ஒரு பெண் தன் கணவன் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று ஆசைபடுவளோ அப்படியே இருப்பவன்.

நவீனுக்கு அபர்ணாவை மிகவும் பிடித்துபோய்விட்டது. அபர்ணா, வீட்டில் செல்லமாகவும் சுதந்திரமாகவும் வளர்க்கப்பட்டவள்.

"அபர்ணா, உனக்கு பையனா பிடிச்சு இருக்கல இல்லனா சொல்லுமா இப்போவே வேண்டாம்னு சொல்லிடலாம்" என்று அப்பா கேட்கும்போது, "உங்களுக்கு பிடிச்சி இருந்தா அதுவே போதும் அப்பா நான் சந்தோசமா இருப்பேன்" என்று சொல்லி முடித்தாள்.

கல்யாண வேலைகள் மிக வேகமா நடந்து கொண்டு இருந்தது.

அபர்ணா சென்னையில் இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்ப்பவள். ஒன்றாக வேலைபார்க்கும் சந்தோஷை காதலிக்கிறாள்.

அபர்ணா தான் தோழி ஆர்த்தியிடம் தான் காதலையும் கல்யாணத்தையும் பற்றி பேச ஆரம்பிக்கும்போதே சந்தோஷும் நண்பர்களும் அங்கு வந்தார்கள். நண்பர்கள் அனைவரும் கூடி பேசி முடிவுக்கு வந்தார்கள் "திருமணத்திற்கு 4 நாள் முன் ஹைதரபாத் போய் பதிவு திருமணம் செய்யலாம் என்று"

திருமண நாள் நெருங்கிக்கொண்டு இருந்தது. திட்டத்தின்படியே அபர்ணா ஒரு நாள் கடிதம் எழுதிவைத்து வீட்டைவிட்டு போய்விட்டாள். கடிதத்தை பார்த்த அபர்ணாவின் தாய், தந்தைக்கு தகவல் சொல்ல அதிர்ச்சியில் அங்கே மயங்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இருதைய சிகிச்சை செய்தாக வேண்டும், அபர்னாவிற்கு தோழி ஆர்த்தியின் வாயில் தகவல் சொல்லப்பட்டது. அவளும் ஆஸ்பத்திரிக்கு பதறிவந்தால். சிகிச்சைக்கு தேவையான பணத்தை எடுக்க வங்கி சென்ற அபர்ணாவிடம் வங்கி மேலாளராக இருக்கும் ஆர்த்தியின் தந்தை, அப்பா இப்போதான் வந்து "நான் இவ்வளவு நாள் சேர்த்த பணம் எல்லாம் இவ கல்யாணத்துக்கு தான், பிள்ளை எங்ககிட்ட ரொம்ப செல்லமா இருந்திட்ட; போகுற இடத்துல எந்த கஷ்டமும் இருக்ககூடாது என்கிட்டே இருக்க பணத்தை எல்லாம் போட்டு கல்யாணத்தை பண்ணுறேன், குழந்தை எப்போவுமே சந்தோசமா இருக்கனும் அது தான் என்னோட இருதைய சிகிச்சைக்கு வச்சு இருந்த பணத்தை கூட எடுத்து அவளுக்கு கல்யாணம் பண்ணுறேன், அவ கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு அவ சந்தோசமா இருக்கணு கேட்ட போதும்"னு சொல்லிட்டு போனாரு அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே. இதை கேட்கும் போதே அபர்ணாவின் கண்களில் தண்ணீர் கொட்டியது.

"நான் தப்பு பண்ணிட்டேன் அங்கிள். அப்பாவிற்கு ஹார்ட்-ல பிரச்சனை இருக்குனு தெரிஞ்சும் சந்தோஷோட ஓடி போய் இருக்க கூடாது. கல்யாண பேச்சு ஆரம்பிக்கும்போதே அப்பா கேட்டாரு அப்போவே சொல்லி இருந்த கண்டிப்பா அப்பா சந்தோஷோட கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு. நான் அப்பாவை இந்த நிலைமைக்கு கொண்டுவந்திடேன். அப்பா அம்மாவை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன். நான் தப்பு பண்ணிட்டேன் அங்கிள், நான் அப்படி செஞ்சு இருக்ககூடாது. அப்பா சரியாகி வந்தவே போதும் இனிமேல் அவங்க கஷ்டபடுற மாதிரி எதுவும் செய்யமாட்டேன். நீங்களும் எனக்காக வேண்டுங்கா அங்கிள், அப்பா சீக்கிரம் சரியாகிடனும்னு."

கடவுளின் கருணையால் சிகிச்சை முடிந்து கண்விழித்து பார்த்தவருக்கு முன்னால் அபர்ணா கண்களில் கண்ணீரோடு "நான் உங்க பொண்ணு அப்பா உங்கள விட்டு போயிடமாட்டேன், நான் பண்ணது தப்புதான் இனி அப்படி நடக்கவே நடக்காது, உங்கள நான் ரொம்ப கஷ்டப்படுதிடேன் என்னை மன்னிச்சிடுங்க"

சந்தோஷின் தொலைபேசி மணி ஒலித்தது எதிர்முனையில் அபர்ணா சற்றும் தாமதிக்காமல், "சந்தோஷ், என்ன மன்னிச்சிடு உன்னோடு இதுக்கு மேல என்னால வர முடியாது. நான் சந்தோசமா இருக்கனும்னு 25 வருஷம் கஷ்டபட்டவரு எங்க அப்பா, அவரை கஷ்டபடுத்திற எதையும் நான் செய்ய கூடாது இனி செய்யமாட்டேன். நான் நவீனை தான் கல்யாணம் பண்ணப்போறேன், அது எனக்கு சந்தோசமா இல்லையானு தெரியாது அனா அது தான் எங்க அப்பா அம்மாக்கு சந்தோசம்னா எனக்கும் சந்தோசம்" என்று முடித்துகொண்டாள்.

ஓரிரு நாளில் திருமண வேலை தொடங்கி நேரமும் வந்தாகிவிட்டது. நவீனுக்கும் அபர்னாவிற்கும் முகூர்த்தம் சுபமாகவே முடிந்துவிட்டது. திருமண மண்டபத்தில் இருந்து நவீன் வீட்டிற்கு செல்ல வண்டி ஏறும்முன், அபர்ணா தான் தந்தையை அழைத்து "நான் உங்க பொண்ணு அப்பா உங்கள கஷ்டபடுத்தி இருந்த என்ன மன்னிச்சிடுங்க"

இருவரும் கண்களில் கண்ணீரோடு...................

சுபம்
--சுகேஷ்குமார் ராஜேந்திரன்



allvoices

Friday, February 26, 2010

Tuesday, December 22, 2009

உடல்

உயிரிலிருந்து அணுவாகி
அணுவிலிருந்து கருவாகி
கருவிலிருந்து உருவாகி
குழந்தையாய் பிறந்து
வளர்ந்து, வாழ்ந்து
கடைசியில்,
பூவோடு சேருந்து போகிறது
மண்ணுக்குள்....

allvoices

Tuesday, December 15, 2009

ஓவியம்

வறண்ட பூமி
விண்மீன்
வானத்து வட்டநிலா
வீடு, வாசல், விதி,
சேரி, குப்பை, குளம்,
ஆறு, அருவி, கடல்,
காற்று, மரம்,
மண், மனிதன்
குழந்தை, குழந்தையின் சிரிப்பு
இவைகளுக்கு எல்லாம் அழகு
உன்னிடத்தில்...
allvoices