ஒரு வெள்ளிகிழமை காலைபொழுது வீடே அமர்களமாய் இருந்தது அபர்ணாவை பெண் பார்க்க வருகிறார்கள் நவீனும் பெற்றோர்களும். நவீன், தமிழ் கலாச்சாரத்துடன் வளர்ந்து அமெரிக்காவில் நல்ல வேளையில் இருக்கும் இளைஞன். ஒரு பெண் தன் கணவன் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று ஆசைபடுவளோ அப்படியே இருப்பவன்.
நவீனுக்கு அபர்ணாவை மிகவும் பிடித்துபோய்விட்டது. அபர்ணா, வீட்டில் செல்லமாகவும் சுதந்திரமாகவும் வளர்க்கப்பட்டவள்.
"அபர்ணா, உனக்கு பையனா பிடிச்சு இருக்கல இல்லனா சொல்லுமா இப்போவே வேண்டாம்னு சொல்லிடலாம்" என்று அப்பா கேட்கும்போது, "உங்களுக்கு பிடிச்சி இருந்தா அதுவே போதும் அப்பா நான் சந்தோசமா இருப்பேன்" என்று சொல்லி முடித்தாள்.
கல்யாண வேலைகள் மிக வேகமா நடந்து கொண்டு இருந்தது.
அபர்ணா சென்னையில் இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்ப்பவள். ஒன்றாக வேலைபார்க்கும் சந்தோஷை காதலிக்கிறாள்.
அபர்ணா தான் தோழி ஆர்த்தியிடம் தான் காதலையும் கல்யாணத்தையும் பற்றி பேச ஆரம்பிக்கும்போதே சந்தோஷும் நண்பர்களும் அங்கு வந்தார்கள். நண்பர்கள் அனைவரும் கூடி பேசி முடிவுக்கு வந்தார்கள் "திருமணத்திற்கு 4 நாள் முன் ஹைதரபாத் போய் பதிவு திருமணம் செய்யலாம் என்று"
திருமண நாள் நெருங்கிக்கொண்டு இருந்தது. திட்டத்தின்படியே அபர்ணா ஒரு நாள் கடிதம் எழுதிவைத்து வீட்டைவிட்டு போய்விட்டாள். கடிதத்தை பார்த்த அபர்ணாவின் தாய், தந்தைக்கு தகவல் சொல்ல அதிர்ச்சியில் அங்கே மயங்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இருதைய சிகிச்சை செய்தாக வேண்டும், அபர்னாவிற்கு தோழி ஆர்த்தியின் வாயில் தகவல் சொல்லப்பட்டது. அவளும் ஆஸ்பத்திரிக்கு பதறிவந்தால். சிகிச்சைக்கு தேவையான பணத்தை எடுக்க வங்கி சென்ற அபர்ணாவிடம் வங்கி மேலாளராக இருக்கும் ஆர்த்தியின் தந்தை, அப்பா இப்போதான் வந்து "நான் இவ்வளவு நாள் சேர்த்த பணம் எல்லாம் இவ கல்யாணத்துக்கு தான், பிள்ளை எங்ககிட்ட ரொம்ப செல்லமா இருந்திட்ட; போகுற இடத்துல எந்த கஷ்டமும் இருக்ககூடாது என்கிட்டே இருக்க பணத்தை எல்லாம் போட்டு கல்யாணத்தை பண்ணுறேன், குழந்தை எப்போவுமே சந்தோசமா இருக்கனும் அது தான் என்னோட இருதைய சிகிச்சைக்கு வச்சு இருந்த பணத்தை கூட எடுத்து அவளுக்கு கல்யாணம் பண்ணுறேன், அவ கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு அவ சந்தோசமா இருக்கணு கேட்ட போதும்"னு சொல்லிட்டு போனாரு அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே. இதை கேட்கும் போதே அபர்ணாவின் கண்களில் தண்ணீர் கொட்டியது.
"நான் தப்பு பண்ணிட்டேன் அங்கிள். அப்பாவிற்கு ஹார்ட்-ல பிரச்சனை இருக்குனு தெரிஞ்சும் சந்தோஷோட ஓடி போய் இருக்க கூடாது. கல்யாண பேச்சு ஆரம்பிக்கும்போதே அப்பா கேட்டாரு அப்போவே சொல்லி இருந்த கண்டிப்பா அப்பா சந்தோஷோட கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு. நான் அப்பாவை இந்த நிலைமைக்கு கொண்டுவந்திடேன். அப்பா அம்மாவை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன். நான் தப்பு பண்ணிட்டேன் அங்கிள், நான் அப்படி செஞ்சு இருக்ககூடாது. அப்பா சரியாகி வந்தவே போதும் இனிமேல் அவங்க கஷ்டபடுற மாதிரி எதுவும் செய்யமாட்டேன். நீங்களும் எனக்காக வேண்டுங்கா அங்கிள், அப்பா சீக்கிரம் சரியாகிடனும்னு."
கடவுளின் கருணையால் சிகிச்சை முடிந்து கண்விழித்து பார்த்தவருக்கு முன்னால் அபர்ணா கண்களில் கண்ணீரோடு "நான் உங்க பொண்ணு அப்பா உங்கள விட்டு போயிடமாட்டேன், நான் பண்ணது தப்புதான் இனி அப்படி நடக்கவே நடக்காது, உங்கள நான் ரொம்ப கஷ்டப்படுதிடேன் என்னை மன்னிச்சிடுங்க"
சந்தோஷின் தொலைபேசி மணி ஒலித்தது எதிர்முனையில் அபர்ணா சற்றும் தாமதிக்காமல், "சந்தோஷ், என்ன மன்னிச்சிடு உன்னோடு இதுக்கு மேல என்னால வர முடியாது. நான் சந்தோசமா இருக்கனும்னு 25 வருஷம் கஷ்டபட்டவரு எங்க அப்பா, அவரை கஷ்டபடுத்திற எதையும் நான் செய்ய கூடாது இனி செய்யமாட்டேன். நான் நவீனை தான் கல்யாணம் பண்ணப்போறேன், அது எனக்கு சந்தோசமா இல்லையானு தெரியாது அனா அது தான் எங்க அப்பா அம்மாக்கு சந்தோசம்னா எனக்கும் சந்தோசம்" என்று முடித்துகொண்டாள்.
ஓரிரு நாளில் திருமண வேலை தொடங்கி நேரமும் வந்தாகிவிட்டது. நவீனுக்கும் அபர்னாவிற்கும் முகூர்த்தம் சுபமாகவே முடிந்துவிட்டது. திருமண மண்டபத்தில் இருந்து நவீன் வீட்டிற்கு செல்ல வண்டி ஏறும்முன், அபர்ணா தான் தந்தையை அழைத்து "நான் உங்க பொண்ணு அப்பா உங்கள கஷ்டபடுத்தி இருந்த என்ன மன்னிச்சிடுங்க"
இருவரும் கண்களில் கண்ணீரோடு...................
சுபம்
--சுகேஷ்குமார் ராஜேந்திரன்