எனக்கு வேலை கிடைப்பதற்கு
நான் படித்த கலித்தொகையும் குறுந்தொகையும்
தேவை இல்லையாம்
பெருந்தொகை ஒன்று வேண்டுமாம்!!!!!!!!
Wednesday, July 30, 2008
Monday, July 28, 2008
பாரதத்தின் இன்றைய விவசாயி
நிலம்,
நிலத்தில் இருப்பது பாதி
இருப்பதில் உழுதது பாதி
உழுததில் விதைத்து பாதி
விதைத்ததில் முளைத்தது பாதி
முளைத்ததில் அறுத்தது பாதி
அறுத்ததில் கிடைத்தது பாதி
கிடைத்ததில் கடனுக்கு கொடுத்தது பாதி.....

Friday, July 25, 2008
சில நேரங்களில் தமிழன் ஆக இருக்க மனம் கனக்கிறது
படித்த இடம்: குமுதம் வார இதழ்
இதழின் தேதி: 30-07-2008
செய்தியில் வந்த சில வார்த்தைகள்:
"ரெண்டு நாள் கழிச்சு சொன்னமாதிரி நாமும் அங்கே போக, வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அதே ஆள் கையில் சர்டிஃபிகேட்டுடன் நின்றார். சர்டிஃபிகேட்டைப் பார்த்தால் சி.சுப்பிரமணியன் என்றிருந்தது. ```பாரதி,' எங்கய்யா?''ன்னு கேட்க, ``அதென்னங்க பெரிய விஷயம்!''னு போனவர் பத்தே நிமிடத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பிற்படுத்தப்பட்டோருக்கான முறையான சான்றிதழுடன் வந்தார். அதைப் பார்த்ததும் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது சின்னச்சாமி என்ற தகப்பனார் பெயரை சின்னராஜ் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தது. அதையும் மாற்ற முடியுமா என புரோக்கரைத் தேடினோம். பார்ட்டி எஸ்கேப்.
புரோக்கருக்கு பாரதியைத் தெரியாமல் இருக்கலாம். கையெழுத்துப்போட்ட அதிகாரிக்குமா சந்தேகம் வந்திருக்காது! `இவர்கள் பாரதியை மறந்துவிட்டார்களா? அல்லது பணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்கள் நினைவில் இல்லையா?'"
இந்த செய்தியை படித்து விட்டு என் மனதில் தோன்றியது - "நெஞ்சு பொறுக்க வில்லை இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைப்பதினால்"
வைரமுத்து வின் வடுகபட்டி முதல் வோல்க வரை புத்தகத்தில், ஒரு ரஷ்ய நாட்டவர் பாரதி பற்றி சொன்னது "இந்த மகாகவி-இன் உடம்பில் மேய்த்த ஈட்களின் அளவு ஆட்கள் இல்லையே"
இப்படி ஒரு தலையங்கம் எழுத நான் வேதனைபடுகிறேன். சொல்வதற்கு ஒன்றும் இல்ல.

Wednesday, July 23, 2008
பெண்மை
இரவு என்னும் போர்களத்தில்
தலையணை என்னும் முரசொலியில்
கண்ணீர் என்ற ஆயுதத்தோடு
யுத்த முழக்கம் இட்டால்
ஒன்று முடிவு
இல்லது ஆரம்பம்!!!
தலையணை என்னும் முரசொலியில்
கண்ணீர் என்ற ஆயுதத்தோடு
யுத்த முழக்கம் இட்டால்
ஒன்று முடிவு
இல்லது ஆரம்பம்!!!
Tuesday, July 15, 2008
சுதந்திரப் பள்ளு
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சைஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மைஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே.
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனிநல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்டநயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்.
நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இதுநமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரிபூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.

Wednesday, July 9, 2008
காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடாஐய பேரிகை கொட்டடா!
பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளிஇன்னமு தினையுண்டு களித்தோம்;கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்காலன் நடுநடுங்க விழித்தோம்.
காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்;நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;நோக்க நோக்கக் களியாட்டம்.

Thursday, July 3, 2008
எனக்கு பிடித்த முதல் கவிதை
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
--பாரதியார்
--பாரதியார்
Subscribe to:
Comments (Atom)