Sunday, September 19, 2010

வாழ்க்கை துணை

குறிப்பு: எனக்கு வந்த மின்னஞ்சலின் தமிழாக்கம் தான் இது.

இயற்கையின் அழகோடு மெதுவாக நடந்து செல்கிறார்கள் நித்யாவும் அவள் கணவன் சஞ்சயும். திருமணம் முடிந்து மூன்று நாட்கள் தான். தேன்நிலவுக்கு மூணார் வந்துள்ளார்கள்.
நித்யாவின் கைகளில் வைத்த மருதாணி இன்னும் அதே சிவப்போடும் நறுமனத்தொடும் இருந்து மூன்று நாட்கள் முன் இருந்த நடந்த திருமண அரவரத்தை ஞாபகப்படுத்துகிறது.
திருமணத்துக்கு முன்தினம் நித்யா, அவளது தாயிடம் "அம்மா, இப்படி எல்லாம் நடக்காது, இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு வேண்டாம் என்னை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விடு" என்று கத்தி கொண்டு இருக்கிறாள் அவளது தாய் சிகை அலங்காரம் செய்யும்போது. அவள், தனது புகுந்த வீடை எப்படி இருக்குமோ? மாமியார் மாமனார் எப்படி இருப்பர்களோ? தான் கணவன் தன்னை சந்தோசமாக வைத்துகொள்வரா? என்று நினைத்து, அழுது அழுது முகம் எல்லாம் விங்கி போய்விட்டது.
திருமண நாள், இப்பொது நித்யாவுக்கும் சஞ்சய்க்கும் திருமணம் முடிந்துவிட்டது.

சஞ்சயும், நித்யாவும் இதற்கு முன் மூன்று முறை தான் பேசி உள்ளார்கள்.
சஞ்சயின் பெயரும் வேலையும் தவிர நித்யவிருக்கு எதுவும் தெரியாது.

தேன்நிலவுக்காக வந்த நித்யாவின் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் "எப்படி யார் என்று தெரியாது ஒருவனுடன் பலாயிரம் மைல்கள் தாண்டி என் பெற்றோர் அனுப்பினர்? பள்ளி செல்லும்போதோ அல்லது கல்லூரி செல்லும்போதோ, அப்பவோ அண்ணனோ வந்து தான் அவளை விட்டு சென்று இருக்கிறார்கள்.

சஞ்சய் காற்றில் கலர் கலராக வரும் பலூன்களை பார்த்து "ஹே நித்யா அங்க பாரு குட்டீஸ் எல்லாம் சந்தோசமா பலூன் விடுறாங்க", நித்யாவிற்கு என்ன சொல்லவேண்டும் என்று புரியவில்லை தானும் பரவசப்பட வேண்டுமா? கூடாத? அவள் பரவசபடுவதற்கு அவளின் நண்பர்களோ பெற்றோரோ அவள் அருகில் இல்லை. சஞ்சய் அங்கே கலர் கலர் பலூன்களை சந்தோசப்படும் பொது இவள் மீண்டும் தன்னை தானே கேள்விகள் கேட்கிறாள். "இவன் திருமணம் ஆகிவிட்டது என்றதை மறந்துவிட்டன? இவன் வாழ்கையில் நான் புதிதாக வந்துள்ளேன் இன்ப துன்பங்களை பகிர்வதற்காக, இதையாவது அவனுக்கு புரிகிறதா?" என்று கேட்டவரே திருமண நாளை நினைத்து பார்க்கிறாள்.

அன்று தான் அவள் வாழ்கையில் முதன் முதலாக, "நான் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கணுமோ? காதலிச்சு இருந்த என்ன பத்தி அவனும், அவன் பத்தி நானும் நிறைய தெரிஞ்சு வச்சு இருப்போம், அப்படி செஞ்சு இருக்கலாமோ? நித்யாவிற்கு தான் பழகிய எந்த நண்பனிடம் காதலிப்பதாக தோன்றவில்லை. அப்படி தோன்றி இருந்தால் கண்டிப்பாக அவள் பெற்றோர் திருமண செய்து வைத்து இருப்பார்கள். ஆனால், திருமண நாள் அன்று இதை பற்றி எல்லாம் சிந்திப்பதற்கு நேரம் இல்லை. இதனால், அவளுக்கு மாப்பிள்ளை தேடும் பொறுப்பு முழுதும் அவள் பெற்றோரிடம். முதலில், மாப்பிள்ளை நல்ல வேலைல இருக்கனும், நல்ல படிச்சி இருக்கனும், நல்லவற இருக்கனும், ஜாதகம் பொருந்தனும், ஒரு சாதில இருக்கனும், நல்ல குடும்பமா இருக்கனும்.... இப்படி நிறைய எதிர்பார்ப்புகள். நாட்கள் போக போக ஒவொன்ற குறைந்து சஞ்சயின் பெயர் நண்பரின் மூலம் கிடைத்தது.

நித்யாவிடம் அப்பா வந்து சொல்லும் பொது அவள், "இந்த பையனும் எல்லாரு மாதிரி தான் அப்பா. சாப்ட்வேர்ல வேலை பார்க்கிறான். இந்த மாதிரி நிறைய பசங்களோட பேசியாச்சு. நீங்களே பார்த்துகோங்க அப்பா" என்று சொன்னால். அவளின் அப்பா எப்படி அவளை சம்மதம் செய்து சஞ்சயிடம் பேச அனுப்பினர்.
இருவரும் மூன்று மணிநேரம் பேசினார்கள். வீடுக்கு போனவளிடம். "அந்த பையன் நல்ல பேசினான? உனக்கு எதாச்சும் வங்கி கொடுத்தன? உன்னை பிடிச்சு இருக்குனு சொன்னன? என்று கேள்விகள். எல்லாவற்றுக்கும் "ஆமாம்" என்று சொல்லி முடித்தாள் நித்யா.
உறவினர்கள் அனைவரும் கூடி திருமணத்தை முடிவு செய்து விட்டார்கள். திருமண வேலைகள் வேகமா ஆரம்பித்து வேக வேகமாய் சந்தனமும் சாவதும் பன்னீரும் மல்லிகையும் வசனயொடு மக்கள் வெள்ளத்தில் முடிந்துவிட்டது. இப்பொழுது அவள் தான் கணவனோடு தேன்நிலவில்.

தனிமையில் தயங்கி நின்ற நித்யாவை, சஞ்சய் கைப்பிடித்து பனி பட்ட மர மேசையில் உட்கார வைத்தான். "என்ன நித்யா என்ன நின்னசிடு இருக்க?", அவள் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. தான் பதில் சொல்ல வேண்டுமா கூடாத என்று கூட தெரியாமல் இருந்தால்.
"உனக்கு தெரியுமா நித்யா எனக்கு கூட இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல" என்று சஞ்சய் சொன்ன உடன், நித்யாவின் மனதில் பதட்டத்துடன் ஆயிரம் கேள்விகள் "நான் சரியாக தான் கேட்டேனா? அவன் சொல்லவதை தவறாக புரிந்து கொண்டேனா? அவனை யாராவது கட்டயப்படுதினர்களா? அவனுக்கு என்னை பிடிக்கவில்லையா?" சஞ்சய் அவளின் முகத்தில் தெரிந்த அத்தனை கேள்விகளையும் பார்த்து மெதுவாக பேச ஆரம்பித்தான்.
"ஆம், நான் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணனும் நினச்சு இருந்தேன். நான் அவளையும் அவ என்னையும் நல்ல புரிஞ்சுகிட்டு தான் கல்யாணம் பண்ணனும் இருந்தேன். அதை தவிர எது நடந்தாலும் நாடகமா தான் இருக்கும்னு நினச்சேன். ஆன எனக்கு வேலைல டென்ஷன், அது போன ஸ்பீட்ல லவ் பண்ண டைம் இல்லாம போய்டிச்சு. கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் முன்னாடி உங்க அப்பா பேசும் பொது உனக்கு கல்யாணத்துல இருந்த பயத்தை பத்தி சொன்னாரு. அதை பயம் தான் எனக்கும் இருந்தது. அப்போ தான் உன்னை நான் கல்யாணம் பண்ணிகிடனும் முடிவு பண்ணேன். கல்யாணம் சீக்கிரம் நடந்ததல உன்கிட்ட எனக்கு பேசவோ பழகவோ டைம் இல்லாம போய்டிச்சு. ஆன இப்போ என் வழக்கை முன்னாடி நீ இருக்க "என்னோட சிரிப்பு, அழுகை, சந்தோஷம், தூக்கம், காதல் எல்லாத்தையும் அனுப்பவிக்கிறதுக்கு. நான் எப்படி பட்ட பெண்ணை காதலிக்கணும்னு நினச்சனோ அப்படியே நீ இருக்க. நான் உன்னை லவ் பண்ணுறேன், நீ பண்ணுவிய?"

சஞ்சய் பேசி முடிக்க நித்யாவின் கண்களில் அருவிய கண்ணீர் கொட்டியது. தனது பெற்றோர் தங்களால் முடிந்ததை விட அருமையான கணவனை அவளுக்கு தந்துள்ளார்கள். கடவுளுக்கும், பெற்றோருக்கும் நன்றி சொல்லிகிறாள். தான் காதலித்து இருந்தால் கூட இப்படி கணவன் கிடைத்து இருக்கமட்டான் என்று.

சஞ்சயின் கேள்விக்கு நித்யா இன்னும் பதில் சொல்லவில்லை, இருவருக்கும் அதன் அர்த்தம் புரியும்.

சந்தோசமாக ஊர் திரும்புகிறார்கள். காதலிக்கும் கணவன் மனைவியாக!!!
allvoices