Tuesday, December 22, 2009

உடல்

உயிரிலிருந்து அணுவாகி
அணுவிலிருந்து கருவாகி
கருவிலிருந்து உருவாகி
குழந்தையாய் பிறந்து
வளர்ந்து, வாழ்ந்து
கடைசியில்,
பூவோடு சேருந்து போகிறது
மண்ணுக்குள்....

allvoices

Tuesday, December 15, 2009

ஓவியம்

வறண்ட பூமி
விண்மீன்
வானத்து வட்டநிலா
வீடு, வாசல், விதி,
சேரி, குப்பை, குளம்,
ஆறு, அருவி, கடல்,
காற்று, மரம்,
மண், மனிதன்
குழந்தை, குழந்தையின் சிரிப்பு
இவைகளுக்கு எல்லாம் அழகு
உன்னிடத்தில்...
allvoices

Thursday, November 12, 2009

நான்

சாலை ஓரத்தில்
நிழலுக்காக மரத்தடி
ஒதுங்கிய பொது
இலை யுதிர்வதிலும்
சங்கீதம் கேட்கிறேன்
நானும் கவிஞன்
ஆகிவிட்டேனோ?
allvoices

Tuesday, November 10, 2009

கண்ணகி

எச்சரிக்கை செய்கிறேன் எழுதும் கவிஞரே
பயந்து கேட்கிறேன் பாடும் கவிஞரே
அழுது கேட்கிறேன் அமுத கவிஞரே
திட்டி கேட்கிறேன் திட்டும் கவிஞரே
தீ சிறிதாக எறிந்தால் விளகேன்போம்
கொளுந்துவிட்டால் நெருப்பேன்போம்
மதுரையே கொளுத்த மங்கையை
கண்ணகியை பற்றி எழுதும் கவிஞரே
தலைநகரில் தண்ணீருக்கு அருகில்
பெண்டகத்தை ஏமாற்றும் கயவனை
பார்த்த எச்சரிக்கும் தோரணாயிலா
நின்று கொண்டு இருக்கிறாய்
பாடும் கவிஞரே திருமகன்
போற்றும் தமிழ் மகளை பற்றி
பாடும் கவிஞரே....
allvoices

Thursday, October 22, 2009

தூரத்து இடி முழக்கம்

தொலைபேசியிலும் கணினியிலும்
நண்பர்களுடன் உரையாடல்
இருப்பினும் மனம்
சுமையாய் சுமக்கிறது
அக்தோ எங்கோ ஓர்
ஓரத்தில் இருந்து கேட்கிறது
உன்னக்காக நான்
வருகிறேன் என்று.
allvoices

Wednesday, October 14, 2009

திரைத்துறையும் என் தலைநகரமும்

என் தலைநகரம் என்றதும் சென்னை பற்றி நான் சொல்ல வரவில்லை. இது என் தலைநகரமான மதுரையும் சினிமாத்துறையின் செயல்படும் தான் இந்த பதிப்பு.

கடந்த 5-6 வருடங்களாக தமிழ் திரை உலகில் வரும் சினிமாக்களில் மதுரை அல்லது மதுரை சுற்றி எடுக்க படுபவை அதிகம் ஆகிவருகின்றன. இதற்கு பதில் கிடைக்க எனக்கு தெரிந்த பத்திரிகையாளர் நண்பர் ஒருவரிடம் பேசினேன். அவர் சென்னையை புர்விகமாக கொண்டு, பிறந்து வளர்ந்தவர். அவர் சொன்ன பதில்கள் மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு பெருமையாக தான் இருக்கிறது.

முதலில், தென் தமிழகத்தை குறிப்பாக மதுரையும் அதை சுற்றி இருக்கும் வட்டாரத்தின் வாழ்கையை படம் பிடித்தல் அது உயிர் ஓட்டமாக இருக்கும் இதுவே தமிழகத்தின் மற்ற பகுதிகளில் படத்துக்கு தேவையான உயிரோட்டம் கிடைக்க முடியவில்லை.

அடுத்து, தமிழ் மொழியை இன்னும் சங்க தமிழில் பேசும் வழக்கம் தென் தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறது. உதரணமாக, பிறகு, சரகம்,லந்து, ஆகட்டும், பையா, களவாணி பையன், ஏணி, கோளாறு, இழவு போன்ற வார்த்தைகள் இன்னும் மதுரை வட்டாரத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது.

அடுத்தாக, மதுரை வட்டாரத்தில் படம் எடுத்தால் அதிர்சடத்தில் படம் நன்றாக போகிறதாம். இது அவரின் வதம்.

எப்படி இருப்பினும் எமது மண்ணை பற்றி பெருமையாக பேசுவதும் சித்தரிப்பதும் அந்த மண்ணின் மைந்தராகிய எண்களும் பெருமை தான். நாங்களும் மார் தட்டி சொல்லுவும் "நாங்களும் மதுரை கரங்க டா"
allvoices

Monday, October 12, 2009

எங்கு செல்கிறோம்???????

கடந்த சில நாட்களாக எண்ணுள் எழும் கேள்வி. இந்த உலகம் சரியான பாதையில் தான் செல்கிறதா? நாம் சரியான பாதையில் தான் செல்கிறோமா?

இந்த சிந்தனை எழும் பொது, நான் எனக்கு கேட்டுக்கொண்ட முதல் கேள்வி, நாம் தாய் மொழி பற்றி.

நான் அமெரிக்காவிற்கு வேலை பார்க்க வந்து 2 வருடங்கள் ஆகின்றன. இந்த 2 வருடத்தில் எனக்கு நாம் மொழி பற்றி மற்றவர்களிடம் வந்த அனுபவங்களே இந்த பதிப்பு.

முதலில், எத்தனை பேர் நாம் நம் தாய் மொழியை பேசுகின்றோம். நம் நண்பர்களிடம், பெற்றோரிடம், உறவினரிடம், நம் பார்க்கும் மற்ற தமிழர்களிடம். இதற்கு உண்மையான பதில் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. நம்முள் ௨0 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தான் என்று. அதிரிச்சியில் இருந்து வந்து ஏன் நாம் இந்த பாதையை அடைந்தோம் என்று பார்போம்.

என்னுடைய நண்பர் ஒருவர், சரளமாக தமிழ் பேச கூடியவர், அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை, Hi Dude, How are you doing?. இதை தமிழ் தெரியாதவர்களிடம் கேட்டால் சரி தான், ஆனால் தெரிந்தவர்களிடம் அதுவும் சுமார் 10 வருடம் பழகிய நண்பரிடம், மிக வருத்தமாக தான் இருக்கிறது.

இன்னொருவர், மிக நன்றாக தமிழில் பேசிக்கொண்டு இருப்பார், இடையில் You know what? Are You Crazy? போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துவர்.

சமீபத்தில் நான் செய்த தவறு ஒன்று, என்னுடைய நெருங்கிய தோழனிடம் பேசும் பொழுது, நான் wind-க்கு against நடந்தேன் என்றேன். ஆங்கிலத்தை தமிழோடு கலந்து பேசியதில் எனக்கும் வருத்தம் தான் அந்த வருத்தத்தின் விழைவு தான் இந்த பதிப்பு.

ஆம், என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, நம்முடைய அலுவலகத்தில் ஆங்கிலம் பேசி ஆகவேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம். ஆனால், வெளியில் நண்பர்களிடம், பெற்றோரிடம், உறவினரிடம், நம் பார்க்கும் மற்ற தமிழர்களிடம் தமிழில் பேசலாமே.

நான் இதை பற்றி சிந்திக்கும் பொழுது வலைத்தளத்தில் படித்த சில விஷயங்கள் நாம் மொழி பற்றி.

1. இப்படியே பாதுகாப்பின்றி போனால் நம் மொழி இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும்.

2. உலகில் மிக தொன்மையான மொழி என்று பெயர் பெற்ற தமிழ், சரித்திரத்திலும், சுவடுகளிலும் தான் இருக்கும்.

3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் வாக்கு பொய்ப்பித்து போய்விடும்.

4. தமிழை தாய்மொழியாக கொண்டு பேச முடியாதவர்களின் எண்ணிக்கை 80 சதவிகிதம் எட்டும் இன்னும் 20 ஆண்டுகளில்.

நீங்கள் இதை படிக்கும் பொழுது உங்களிடம் நான் கேட்பது, என்னோடு சேர்ந்து தமிழ் மொழி காக்க வாங்க என்றல்ல.... உங்கள் மொழியை
அழிவில் இருந்து பாதுகாக்க உங்களால் முடிந்ததை செய்யுங்கள். பார்க்கும் தமிழ் நண்பர்களிடம் தமிழில் பேசுங்கள், நீங்கள் அப்படி பேசும் பொழுது உங்களின் அல்லது அவர்களின் பிள்ளைகளும் உங்களிடம் இருந்து இந்த அமுத மொழிய கற்றுகொள்ளட்டும்.

உங்கள் நேரத்தை தமிழுக்காக சில நிமிடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

என்றும் தமிழை நேசிக்கும்,
இரா. சுகேஷ்குமார்
allvoices

Monday, October 5, 2009

மார்கழி

கோவில் மணி ஓசை
கடும் குளிர்
கலர் கோலங்கள்
சுப்ரபாதம்
சிட்டு குருவியின் சலசலப்பு
இத்தனைக்கும் நடுவில்
கட்டி இழுக்கும் தூக்கம்
மார்கழி மயக்கத்தில்.......
allvoices

Thursday, October 1, 2009

வண்டிக்காரன் பாட்டு

தம்பி: ''காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?''

அண்ணன்: எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!''

தம்பி: ''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே''-''

அண்ணன்: எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!''

--மகாகவி பாரதியார்

allvoices

Friday, September 25, 2009

மதுரை

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - துாள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை

நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான்
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த சுவடுகளும்
காணக் கிடைக்கும் பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால் இளமதுரை

மல்லிகை மௌவல் அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை - நீர்
நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன் நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் - அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை

தமிழைக் குடித்த கடலோடு - நான்
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிர்தம் பரப்பும் வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை - இது
மரபுகள் மாறா வேல்மதுரை

மதுரை தாமரைப் பூவென்றும் - அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் - அவை
எம்குடி மக்கள் திரளென்றும் - பரி
பாடல் பாடிய பால்மதுரை - வட
மதுரா புரியினும் மேல்மதுரை

மீசை வளர்த்த பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர் சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும் - அந்த
அந்நியரில்சில கண்ணியரும்
ஆட்சிபுரிந்த தென்மதுரை -
மீனாட்சியினால் இது பெண்மதுரை

மண்ணைத் திருட வந்தவரைத் - தம்
வயிற்றுப் பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட வந்தவரை - ஊர்
பொசுக்கிக் போக வந்தவரை - தன்
சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய தூய்மதுரை

அரபுநாட்டுச் சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த சாறர்ற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல் - ஒரு
மண்டபம் திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும் கலைமதுரை - இது
கவிதைத் தமிழின் தலைமதுரை

வையைக் கரையின் சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும் தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும் தென்மதுரை

போட்டி வளர்க்கும் மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின் ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும் வளையொலியும்
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை - கண்
தர்ங்காதிருக்கும் தொழில்மதுரை

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை

நெஞ்சு வறண்டு போனதனால் வையை
நேர்கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் - நதியைப்
பட்டாப் போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை
allvoices

Friday, July 17, 2009

தமிழின் தலைமை

முத்தமிழ் அறிஞரே
என் அரசியல் வாழ்வின் முலவரே
உன் மீது வந்த விமர்சனங்களுக்கு
வேதனை கொள்ளாதவரே.
நம்பிக்கை, தன்னம்பிக்கை,
விடாமுயற்சி என்ற
வார்த்தைகளுக்கு அர்த்தம்
கொண்டவரே.
நீ சந்தித்த வெற்றிகளை விட
தோல்விகள் அதிகம்
தோல்விகளை கண்டு துவண்டமால்
வெற்றியாய் காண்பவரே.
உன்னால் - உடன்பிறப்பு என்ற
வார்த்தைக்கு என் உயிர்
உள்ளவரை அர்த்தம் கொள்வேன்
உன்னால் - வீழ்வது நாமாக
இருப்பின்னும் வாழ்வது
தமிழாக இருக்க வேண்டும்
என்பதற்காக வீழவும்
தயாராக உள்ளேன்.
வாழ்க தமிழ்!!!! வளர்க தமிழ்!!!
allvoices

Wednesday, July 15, 2009

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பனே!!!

குறிப்பு: இக்கவிதை என் நண்பன் தளவாய்-க்கு


என் உயிர் தோழனே
என் இதயத்து நண்பனே
பத்தொன்பது மாதங்கள்
உன்னை பார்க்காமல் போயிற்று
இருபது சொட்ச நாளில்
மீண்டும் உன்னை பார்க்க போகிறான்
உன் பிறந்த நாளுக்கு
அருகில் இருந்து வாழ்த்து
சொல்ல இயலவில்லை என்றாலும்
இந்த பூமி பந்தின் எங்கோ ஒரு
மூலையில்
இன்று உன்னை மட்டுமே நினைத்து
நெகிழிந்து கொண்டு இருக்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பனே.
allvoices

Tuesday, June 23, 2009

திருமணம்

அம்மி மிதிச்சு
அருந்ததி பார்த்து
வேதங்கள் ஓத
முடிந்தாயிற்று
சுபமுகூர்த்த சுபதினம்.
திருசிடிக்காக
வரதட்சணை என்ற
வஞ்சக கொடுமையால்
விலை போன
மனபெண்ணின் கண்ணீர்
allvoices

Thursday, June 18, 2009

Saturday, June 6, 2009

ஏன் இப்படி?

பெண்ணிடம்,
நெருங்கி சென்றால்
விலகி செல்கிறாள்,
விலகி சென்றால்
நெருங்கி வருகிறாள்;
கண்ணே,
இப்போது நான் விலகவா
அல்ல நெருங்கவா.
allvoices

Sunday, May 31, 2009

சுமை

சேய் குரங்கை சுமக்கும் தாய்
கிளை விட்டு கிளை தாவி
மரம் விட்டு மரம் தாவும் போது
தவற விட்டது -
பிள்ளை தாவ கற்று பழகி கொண்டது
என்று எண்ணி விட்டது!!!
பிள்ளை தவழ்ந்தது தாவியது
தவழ்ந்தது தாவியது
கடைசியில் தாவ கற்றும் கொண்டது
ஒ மனிதனே!!!
நீயும் அவன் இடமிருந்து தான் வந்தாய்
நீ மட்டும் ஏன் உன்
தாய் தந்தையை கடைசி வரை
சுமக்க சொல்கிறாய்
அவர்களின் சுமையை நீ சுமை
சுகம் அவர்களை சுமக்கட்டும்
சுமையை நாம் சுமப்போம்.

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Saturday, May 30, 2009

தோழிமார் கதை

allvoices

Thursday, May 28, 2009

மகிழ்ச்சி

allvoices

Wednesday, May 27, 2009

அம்மா

allvoices

Saturday, May 16, 2009

நன்றி!!!!!!!!!நன்றி!!!!!!!!!நன்றி!!!!!!!!!

நன்றி மறவாது நன்றன்று!!!!!!!!

எமது வேண்டுகோளை ஏற்று
ஜனநாயக முற்போக்கு வேட்பாளர்களுக்கு
வாக்களித்து வெற்றி பெற வைத்த
உமது பெற்றோர், உற்றார்,
உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும்
ஏன் நன்றி.................
allvoices

Sunday, May 10, 2009

மீண்டும் உங்களை தேடி

நண்பர்களே, சகோதரர்களே, சகோதிரிகளே
மற்றும் என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே........

மீண்டும் ஒரு முறை உங்களை தேடி
உங்கள் நண்பன்.............
நாம், நம் நாட்டின் தலை எழுத்தை
திர்மானிக்கும் நேரம் மே திங்கள் 13 நாள்
உங்கள் ஜனநாயக உரிமை செலுத்தும் நாள்
உங்கள் வாக்குகளை கேட்டு............
சென்ற முறை கிள்ளி தருகிறோம் என்றோம்
அள்ளி தந்தோம்
இப்போதும் அதை சொல்கிறோம்
மீண்டும் அள்ளி தருவதற்கு..........
சின்னஞ்சிறு பிழைகள் இருப்பினும்
அதை களைந்து விடுவோம்................
மீண்டும் ஒரு முறை
எங்களுக்கு வாய்பை தாருங்கள்
உங்களுக்கு பணிவிடை புரியா................

உங்கள் மற்றும் பெற்றோர், உற்றார், உறவினர்,நண்பர்களிடம் கூறுங்கள்............
வாக்களிக்க சொல்லுங்கள்
ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு.......
உங்கள் சின்னம்

உதயசூரியன்
கை
நட்சத்திரம்

நன்றி
உங்கள் இரா. சுகேஷ்குமார்
allvoices

Monday, January 12, 2009

பொங்கல்

சென்ற வருடம் வரை
உழவனுக்கு உகந்த நாள்...
நாளை முதல் 
ஒவ்வொரு தமிழனுக்கும் 
புத்தாண்டு நாளும் தான்.
கதிரவன் உதிக்கும் பொழுது
விடிவது நாளும் வருடமும் புதிதாய்...
வருடம் முழுதும் உழைத்தவனுக்கு 
நாம் நன்றிகளை சொல்ல உதவும் நாள்
உழவனை மிஞ்சிய 
உழைப்பாளி உலகில் இல்லை
உழைப்பவனுக்கு வாழ்த்து கூறுவோம்
பொங்கலோ பொங்கல்
மற்றும்
புத்தாண்டு வாழ்த்துகள்...
allvoices