Friday, July 25, 2008

சில நேரங்களில் தமிழன் ஆக இருக்க மனம் கனக்கிறது

படித்த இடம்: குமுதம் வார இதழ்

இதழின் தேதி: 30-07-2008

செய்தியில் வந்த சில வார்த்தைகள்:

"ரெண்டு நாள் கழிச்சு சொன்னமாதிரி நாமும் அங்கே போக, வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அதே ஆள் கையில் சர்டிஃபிகேட்டுடன் நின்றார். சர்டிஃபிகேட்டைப் பார்த்தால் சி.சுப்பிரமணியன் என்றிருந்தது. ```பாரதி,' எங்கய்யா?''ன்னு கேட்க, ``அதென்னங்க பெரிய விஷயம்!''னு போனவர் பத்தே நிமிடத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பிற்படுத்தப்பட்டோருக்கான முறையான சான்றிதழுடன் வந்தார். அதைப் பார்த்ததும் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது சின்னச்சாமி என்ற தகப்பனார் பெயரை சின்னராஜ் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தது. அதையும் மாற்ற முடியுமா என புரோக்கரைத் தேடினோம். பார்ட்டி எஸ்கேப்.

புரோக்கருக்கு பாரதியைத் தெரியாமல் இருக்கலாம். கையெழுத்துப்போட்ட அதிகாரிக்குமா சந்தேகம் வந்திருக்காது! `இவர்கள் பாரதியை மறந்துவிட்டார்களா? அல்லது பணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்கள் நினைவில் இல்லையா?'"

இந்த செய்தியை படித்து விட்டு என் மனதில் தோன்றியது - "நெஞ்சு பொறுக்க வில்லை இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைப்பதினால்"

வைரமுத்து வின் வடுகபட்டி முதல் வோல்க வரை புத்தகத்தில், ஒரு ரஷ்ய நாட்டவர் பாரதி பற்றி சொன்னது "இந்த மகாகவி-இன் உடம்பில் மேய்த்த ஈட்களின் அளவு ஆட்கள் இல்லையே"

இப்படி ஒரு தலையங்கம் எழுத நான் வேதனைபடுகிறேன். சொல்வதற்கு ஒன்றும் இல்ல.
allvoices

No comments: