Tuesday, January 25, 2011

கருவறை தியானம்

ஆண்டவனே இன்னும்
40 வாரங்களில் வீலென்ற சத்தத்தோடு
விழிக்க போகிறேன்
பூமியில் பாதம் பட்ட உடன்
பல்லாயிரம் ஆசைகளுடன்
சுகமான பிரசவம் வேண்டும்
பிறந்த உடன் தூக்கம் வேண்டும்
விழித்த பின் சிரிப்பு வேண்டும்
சுற்றும் நட்பும் சூழ வேண்டும்
பட்டு துணிகள் படர வேண்டும்
குட்டி பொம்மைகள் நிறைய வேண்டும்
தூக்கி கொஞ்ச ஆட்கள் வேண்டும்
பள்ளியில் சுளுவாய் சேர வேண்டும்
சேர்ந்த பின்பு முதல் ரேங்க் வேண்டும்
பருவ வயதில் காதல் வேண்டும்
காதலியோடு சுற்ற வேண்டும்
சுற்றும் காதலியை மணக்க வேண்டும்
ஆசை பிள்ளைகள் அமைய வேண்டும்
மாடி வீடு கட்ட வேண்டும்
ஊரார் போற்ற வழ வேண்டும்
சொகுசாய் போக ஊர்தி வேண்டும்
உலகை வாங்க பணமும் வேண்டும்
நோயில்ல முதிர்ச்சி வேண்டும்
சிரித்து கொண்டே சாக வேண்டும்
இத்தனை வேண்டுமென்று உன்னை
வேருபேற்றி சராசரி ஜீவனாக
விருப்பமில்ல.
சில போதுங்கள் மட்டும் போதுமே
அன்பான தாய் தந்தை போதும்
உடையாத உறவுகள் போதும்
நம்பிக்கையான நட்பு போதும்
படுத்த உடன் தூக்கம் போதும்
பசிக்கு கொஞ்சம் சோறு போதும்
யாரையும் புண்படுத்தாத மனது போதும்
போதும் போதும் போதுமே
இவை மட்டும் போதுமே!!!
allvoices

No comments: