Monday, October 12, 2009

எங்கு செல்கிறோம்???????

கடந்த சில நாட்களாக எண்ணுள் எழும் கேள்வி. இந்த உலகம் சரியான பாதையில் தான் செல்கிறதா? நாம் சரியான பாதையில் தான் செல்கிறோமா?

இந்த சிந்தனை எழும் பொது, நான் எனக்கு கேட்டுக்கொண்ட முதல் கேள்வி, நாம் தாய் மொழி பற்றி.

நான் அமெரிக்காவிற்கு வேலை பார்க்க வந்து 2 வருடங்கள் ஆகின்றன. இந்த 2 வருடத்தில் எனக்கு நாம் மொழி பற்றி மற்றவர்களிடம் வந்த அனுபவங்களே இந்த பதிப்பு.

முதலில், எத்தனை பேர் நாம் நம் தாய் மொழியை பேசுகின்றோம். நம் நண்பர்களிடம், பெற்றோரிடம், உறவினரிடம், நம் பார்க்கும் மற்ற தமிழர்களிடம். இதற்கு உண்மையான பதில் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. நம்முள் ௨0 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தான் என்று. அதிரிச்சியில் இருந்து வந்து ஏன் நாம் இந்த பாதையை அடைந்தோம் என்று பார்போம்.

என்னுடைய நண்பர் ஒருவர், சரளமாக தமிழ் பேச கூடியவர், அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை, Hi Dude, How are you doing?. இதை தமிழ் தெரியாதவர்களிடம் கேட்டால் சரி தான், ஆனால் தெரிந்தவர்களிடம் அதுவும் சுமார் 10 வருடம் பழகிய நண்பரிடம், மிக வருத்தமாக தான் இருக்கிறது.

இன்னொருவர், மிக நன்றாக தமிழில் பேசிக்கொண்டு இருப்பார், இடையில் You know what? Are You Crazy? போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துவர்.

சமீபத்தில் நான் செய்த தவறு ஒன்று, என்னுடைய நெருங்கிய தோழனிடம் பேசும் பொழுது, நான் wind-க்கு against நடந்தேன் என்றேன். ஆங்கிலத்தை தமிழோடு கலந்து பேசியதில் எனக்கும் வருத்தம் தான் அந்த வருத்தத்தின் விழைவு தான் இந்த பதிப்பு.

ஆம், என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, நம்முடைய அலுவலகத்தில் ஆங்கிலம் பேசி ஆகவேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம். ஆனால், வெளியில் நண்பர்களிடம், பெற்றோரிடம், உறவினரிடம், நம் பார்க்கும் மற்ற தமிழர்களிடம் தமிழில் பேசலாமே.

நான் இதை பற்றி சிந்திக்கும் பொழுது வலைத்தளத்தில் படித்த சில விஷயங்கள் நாம் மொழி பற்றி.

1. இப்படியே பாதுகாப்பின்றி போனால் நம் மொழி இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும்.

2. உலகில் மிக தொன்மையான மொழி என்று பெயர் பெற்ற தமிழ், சரித்திரத்திலும், சுவடுகளிலும் தான் இருக்கும்.

3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் வாக்கு பொய்ப்பித்து போய்விடும்.

4. தமிழை தாய்மொழியாக கொண்டு பேச முடியாதவர்களின் எண்ணிக்கை 80 சதவிகிதம் எட்டும் இன்னும் 20 ஆண்டுகளில்.

நீங்கள் இதை படிக்கும் பொழுது உங்களிடம் நான் கேட்பது, என்னோடு சேர்ந்து தமிழ் மொழி காக்க வாங்க என்றல்ல.... உங்கள் மொழியை
அழிவில் இருந்து பாதுகாக்க உங்களால் முடிந்ததை செய்யுங்கள். பார்க்கும் தமிழ் நண்பர்களிடம் தமிழில் பேசுங்கள், நீங்கள் அப்படி பேசும் பொழுது உங்களின் அல்லது அவர்களின் பிள்ளைகளும் உங்களிடம் இருந்து இந்த அமுத மொழிய கற்றுகொள்ளட்டும்.

உங்கள் நேரத்தை தமிழுக்காக சில நிமிடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

என்றும் தமிழை நேசிக்கும்,
இரா. சுகேஷ்குமார்
allvoices

3 comments:

Samuel | சாமுவேல் said...

பல வருடங்கள் முன்னாடி ஹிந்தி ஆதிகத்திற்கு எதிரா போராடுனோம், இப்ப எந்த ஆதிக்கமும் இல்லாமலே நம்மவர்கள் இப்படி பன்னா என்னனு சொல்லி போராடறது ?

Sathana Valli said...

Very valuable insight of real situation.But still why is there a general assumption that tamilans are regionally biased are not ready to accept anything alien to them.leave alone the mutual relation establishment of tamil and kannada poets on a political level.But at grass root level are we ready to change our views?.My humble opinion is that we should be open to other languages too if we want our language to be accepted by others.But definitely one thing that i drive home is that we should enrich the heritage and speak in our lang instead of a alien lang.Goodos to you to get this thought in the mind of others

Unknown said...

நல்ல கருத்து ஆனா இதுக்கு நம்மே ஒன்னும் பண்ண முடியாது. நீயும் நானும் தமிழ் ல பேசலாம் ஆனா மத்தவங்கள பேச கட்டாய படுத்து முடியாது. நம்மை போல் ஆட்கள் இறக்கும் வரை தமிழுக்கு சாவே கிடையாது.